• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

selvan by selvan
July 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன், ஈழத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணமொன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம், இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.” – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

by selvan
July 3, 2026
0

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாகாணத்துக்காகக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ்,...

அனைத்துத் துறைகளிலும்அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

அனைத்துத் துறைகளிலும்
அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

by selvan
July 3, 2026
0

தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய...

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

by selvan
July 3, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது இவ் பிரதேச...

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கை கராத்தே சங்கத்தில் இடம்பெற்று வரும் பெருமளவிலான பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்...

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

by Mathavi
July 3, 2026
0

கிளிநொச்சி மாவட்டம், வண்ணாங்கேணி வடக்கு கிராமத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது.!

by Mathavi
July 3, 2026
0

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை...

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
July 3, 2026
0

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல மொரவத்த பகுதியில் உள்ள வாகன சேவை மையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (2) பணியாற்றிக்கொண்டிருந்த 18 வயது இளைஞன் ஒருவர் மின்சாரத்...

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக...

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

by Mathavi
July 3, 2026
0

மக்களுக்கு உணரும் படியாக எரிபொருள் விலையைக் குறைப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்த திசைகாட்டி அரசாங்கம், 'மலையைக் கிண்டி எலியைப் பிடித்த கதையாக' மிகச் சொற்ப அளவிலேயே விலையைக்...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
July 3, 2026
0

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி