• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!

Mathavi by Mathavi
July 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
நாடு முழுவதிலும் 56,422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் குறித்து தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் இருந்து 56 ஆயிரத்து 422 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் டெங்கு தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளதுடன், கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21 ஆயிரத்து 556 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 1,025 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.47 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளும் இதன் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 15 வீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 8.76 வீதமும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், வைத்தியசாலைகளின் பொது வார்டுகள் மற்றும் சிறுவர் வார்டுகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இது ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்புக்கும், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், பிற நோய்களுக்காகச் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் மருத்துவச் சேவைகளிலும் இதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜூன் மாதத்தில் பல கட்டங்களாக விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு அரச நிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம், முப்படையினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினர் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஜூலை 2, 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் மீண்டும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் புகை விசிறல் முறையானது, பறக்கும் நிலையில் உள்ள முதிய நுளம்புகளை மாத்திரமே அழிக்கும் என்பதால் அது மட்டுமே போதுமானதல்ல என்றும் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்புகளின் வாழ்க்கை வட்டத்தின் பெரும் பகுதி தண்ணீரிலேயே கழிவதால், முட்டை மற்றும் கூட்டுப்புழுக்கள் உள்ள நீர்நிலைகளை அழிப்பது கட்டாயமாகும். எனவே, புகை விசிறல் மற்றும் நீர்நிலைகளை அழித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டும்.

மேலும், டெங்கு பரவலின் ஆரம்பக் காலகட்டத்தில் பாடசாலை வளாகங்களிலேயே அதிகளவான நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டதால், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டு, பாடசாலை சுகாதாரக் குழுக்கள் மூலம் தூய்மைப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

டெங்கு ஒழிப்பை நீண்ட கால அடிப்படையில் கிராம உத்தியோகத்தர் மட்டத்திலிருந்து பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சின் செயலாளர் விரைவில் வெளியிடவுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

அத்துடன், டெங்கு ஒழிப்புக்காக வழமையான பௌதிக முறைகளுக்கு மேலதிகமாக, உயிரியல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வருட இறுதிக்குள் வெளிநாட்டு நிறுவனமொன்றின் ஒத்துழைப்புடனும், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடனும் இணைந்து இந்த உயர் தொழில்நுட்ப முறையை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஒரு சில வீடுகளில் டெங்கு நோயாளர்கள் இருந்தும், மீண்டும் அங்கு பரிசோதிக்கும் போது நுளம்பு பெருகும் இடங்கள் காணப்படுகின்றமை பொதுமக்களின் பெரும் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும் வைத்தியர் கவலை வெளியிட்டுள்ளார்.

மழைக்காலம் இல்லாவிட்டாலும் கூட, நுளம்புகள் இடும் முட்டைகள் நீர்நிலைகளின் சுவர்களில் ஒட்டியிருந்து, சிறியளவு நீர் கிடைத்தாலும் மீண்டும் பெருகும் தன்மையுடையவை. எனவே, பொது இடங்கள் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேருவதைத் தவிர்த்து, நீர் தேங்கும் இடங்களை முறையாக அகற்றி, இந்த அபாயகரமான நோயிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

by selvan
July 4, 2026
0

அம்பாறையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு...

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

by selvan
July 4, 2026
0

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின்அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின் அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

by selvan
July 4, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என...

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

by selvan
July 4, 2026
0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், அனுராதபுரம் மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட இரு வேறு முற்றுகைகளின் போது,...

அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம்அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!

அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம் அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!

by selvan
July 4, 2026
0

தேர்தலுக்கு முன்னர் மக்களே தங்களது பாதுகாப்பு என்றும், தமக்கு பாதுகாப்புப் படையினர் தேவையில்லை என்றும் கூறிய தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம்...

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

by selvan
July 4, 2026
0

சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம், ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும்,...

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கராத்தேயில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி!

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கராத்தேயில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி!

by selvan
July 4, 2026
0

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற...

குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக் கொ*லை! – சகோதரன் கைது

குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக் கொ*லை! – சகோதரன் கைது

by selvan
July 4, 2026
0

குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தடியால் அடித்துப் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபருக்கும் அவருடைய...

மோட்டார் சைக்கிள் கோர விபத்து! – 21 வயது இளைஞர் பலி!

மோட்டார் சைக்கிள் கோர விபத்து! – 21 வயது இளைஞர் பலி!

by selvan
July 4, 2026
0

புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம வீதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிள்...

இனவாதிகள், மோசடியாளர்கள் எதிரணியுடன் இணைவார்கள் என்பதை தயாசிறி எம்.பி ஏற்றுக்கொண்டுள்ளார்!

இனவாதிகள், மோசடியாளர்கள் எதிரணியுடன் இணைவார்கள் என்பதை தயாசிறி எம்.பி ஏற்றுக்கொண்டுள்ளார்!

by selvan
July 4, 2026
0

"தேர்தல் காலத்தில் இனவாதிகள், படுகொலையாளர்கள் மற்றும் அரச நிதி மோசடியாளர்கள் அனைவரும் தங்களது அணியுடன் ஒன்றிணைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமையானது எதிர்க்கட்சியின் உண்மையான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி