• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கடன்பட்டாவது தானசாலை நடத்தும் மக்கள்.!

Mathavi by Mathavi
June 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கடன்பட்டாவது தானசாலை நடத்தும் மக்கள்.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளமையானது, பௌத்த கலாச்சாரத்தையும் தான தர்மப் பாரம்பரியத்தையும் எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கான மிகப்பெரிய சான்றாகும் என்று மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“இன்று நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழலில் 20 கிலோகிராம் அரிசியைக் கூட கடன் அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. அரச ஊழியர்களுக்குக்கூட சம்பளக் கழிப்பு முறையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், அந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மிஹிந்தலை புனித பூமிக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்காக இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் தமது பொருளாதார சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தான தர்மப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிஹிந்தலை புனித பூமியுடனும் பௌத்த பாரம்பரியத்துடனும் மக்களுக்கு உள்ள ஆழமான பற்றையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது.

மிஹிந்தலை பொசன் வாரத்தின் போது விகாரையை அண்மித்த பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், நீராடும் இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மையமாகக் கொண்டு பக்தர்களிடம் சிலர் சட்டவிரோதமாக பணம் அறவிட முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அத்தகைய நபர்களுக்கு ஒரு சதம்கூட வழங்க வேண்டாம்.

உள்ளூராட்சி மன்றங்களால் சட்டபூர்வமாக அறவிடப்படும் சேவைக் கட்டணங்களைத் தவிர வேறு எவருக்கும் பணம் வழங்க வேண்டியதில்லை. ஏதேனும் கட்டணம் செலுத்த நேர்ந்தால் கட்டாயமாக பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பற்றுச்சீட்டு இன்றி எந்தவித பணமும் வழங்கக் கூடாது. யாரேனும் சட்டவிரோதமாக பணம் கோரினால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இயன்றால் அவர்களின் புகைப்படத்தை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், மிஹிந்தலைக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் 7 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொசன் வாரத்தின் முழு காலப்பகுதியிலும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Posts

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

by Mathavi
June 29, 2026
0

​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்...

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

by Mathavi
June 29, 2026
0

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்...

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 29, 2026
0

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மூளாய் 4ஆம் வீதியின் புனரமைப்பு பணிகளானது இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த...

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 29, 2026
0

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கை...

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

by Mathavi
June 29, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இன்று (29) அதிகாலை பொலிஸார் வீதிச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, விசுவமடு பகுதியிலிருந்து அனுமதி இன்றி மரங்களை...

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

by Mathavi
June 29, 2026
0

இந்த ஆண்டு, பொசன் திருவிழாவைக் குறிக்கும் வகையில், மஸ்கெலியா துனுத்துடு ஓய மகா வித்தியாலய மாணவர்களின் பங்கேற்புடன், இன்று பொசன் ஊர்வலமும் அழகான கவிதைச் சொற்பொழிவும் நடத்தப்பட்டன....

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

by Mathavi
June 29, 2026
0

இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போல் செயற்படுகின்றார்கள் என்றும்...

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

by Mathavi
June 29, 2026
0

யாழ். மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தும் பணியினை யாழ். மாநகரசபை ஆரம்பித்துள்ளது. நீண்டகாலத்தின் பின்பு புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன....

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

by Mathavi
June 29, 2026
0

மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டு இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம்...

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 29, 2026
0

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி