• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அநுரவுக்கும் கோட்டாவின் கதியே ஏற்படும்.!

Mathavi by Mathavi
June 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
அநுரவுக்கும் கோட்டாவின் கதியே ஏற்படும்.!
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும் என்றும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசானது, எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை மாத்திரமே இலக்காகக் கொண்டு, அரிசி விநியோகத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அரச ஊழியர்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கு இந்த அரசுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது போலும். இவ்வாறான பைத்தியக்காரத்தனம் உலகத்தில் எங்குமே இல்லை.

அழகான, தூய்மையான, பெரும் பணக்கார இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்தவர்கள், இன்று அரச ஊழியர்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கவா நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்? தற்போது நாடு அவ்வாறான நிலையை அடைந்துள்ளதா? அவ்வாறாயின் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணங்கள் எங்கே? சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் ஏனைய கடன் உதவிகள் மூலமும் பெறப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? அவை எதற்கும் இந்த அரசிடம் பதில் இல்லை.

அரசுக்கு அரச ஊழியர்களின் பசியைப் பற்றி மாத்திரமே கவலை உள்ளது. ஏழைக் கிராமங்களில் வாழும் ஏனைய மக்களுக்குப் பசி இல்லையா? அவர்கள் உணவு உண்பதில்லையா? அல்லது அவர்கள் புண்ணாக்கா உண்கின்றார்கள்? அரச ஊழியர்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த அரிசிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரச ஊழியர்கள் அந்தளவுக்குப் பிச்சைக்காரர்கள் அல்லர், ஆனால் இந்த அரசு அவர்களைக் கையேந்திப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

ஏழைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கோ அல்லது விவசாயிகளிடமிருந்து நெல்லை முறையான விலைக்குக் கொள்வனவு செய்வதற்கோ அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு உடனடியாக மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கிப் போராடுவது நிச்சயம். அன்று கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குப் போகுமாறு கூறியதைப் போல், அநுரகுமார திஸாநாயக்கவையும் வீட்டுக்குப் போகுமாறு கூறி மக்கள் வீதிக்கு இறங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.” – என்றார்.

Related Posts

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

by Mathavi
June 29, 2026
0

​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்...

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

by Mathavi
June 29, 2026
0

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்...

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 29, 2026
0

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மூளாய் 4ஆம் வீதியின் புனரமைப்பு பணிகளானது இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த...

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 29, 2026
0

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கை...

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

by Mathavi
June 29, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இன்று (29) அதிகாலை பொலிஸார் வீதிச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, விசுவமடு பகுதியிலிருந்து அனுமதி இன்றி மரங்களை...

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

by Mathavi
June 29, 2026
0

இந்த ஆண்டு, பொசன் திருவிழாவைக் குறிக்கும் வகையில், மஸ்கெலியா துனுத்துடு ஓய மகா வித்தியாலய மாணவர்களின் பங்கேற்புடன், இன்று பொசன் ஊர்வலமும் அழகான கவிதைச் சொற்பொழிவும் நடத்தப்பட்டன....

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

by Mathavi
June 29, 2026
0

இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போல் செயற்படுகின்றார்கள் என்றும்...

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

by Mathavi
June 29, 2026
0

யாழ். மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தும் பணியினை யாழ். மாநகரசபை ஆரம்பித்துள்ளது. நீண்டகாலத்தின் பின்பு புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன....

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

by Mathavi
June 29, 2026
0

மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டு இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம்...

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 29, 2026
0

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி