மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நிதானமாக கையாள வேண்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை அனாவசியமாக யாரிடமும் பேசாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய தோல்விகளை எல்லாம் மாற்றி, வெற்றிப் பாதையில் பயணம் செய்ய வைப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். மன நிம்மதி இருக்கும். எதிரி தொல்லை விலகும். நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று, சென்ற இடமெல்லாம் உபசாரம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். நிதிநிலைமை சீராகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தேவையற்ற மன பயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகள் பெருசாக வராது. துணிச்சலோடு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும். புது முயற்சிகள் எடுக்கும் போது சின்ன தடுமாற்றம் இருக்கும். விடாமுயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மறதியால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு வேலையிலும் முழு ஈடுபாடு தேவைப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேண்டாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்கோபம் வேண்டாம். உறவுகளோடு சண்டை சச்சரவு வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும். நிதானத்தை இழக்கக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக்கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். அறிவு சார்ந்த விஷயங்களில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சாந்தமாக இருப்பீர்கள். முன் கோபத்தை நீங்களே குறைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே ஆறுதலும் சொல்லிக் கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய உங்கள் மௌனமும் ஒரு காரணமாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சீரான போக்கில் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு மனதை ஒருநிலைப்படுத்தி, கடமையில் கவனம் செலுத்துங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி தேவை. ஆர்ப்பாட்டம் இருக்கக் கூடாது. எல்லா விஷயத்தையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சிந்தனைகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். உங்களுடைய வேலையில் கவனமாக இருப்பீர்கள். கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.


