மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது நல்லதே நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது தடுமாற்றம் இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருந்தாலும், அதை என்ன செலவு செய்வது என்ற தடுமாற்றத்தில் இருப்பீர்கள். குழப்பத்தோடு ஒரு வேலையை செய்ய வேண்டாம். இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேளுங்கள் நல்லதே நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்புகளை சமாளித்து சில வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனம் தளராமல் நடந்து கொள்வது நல்லது. இளைஞர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகள் சில சமயம் தவறாக செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது, ஜாக்கிரதை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நேரம் போவதே தெரியாது. உங்களுடைய முக்கியமான வேலைகளை கவனிக்க தவற வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். வியாபாரத்திலும் வேலையிலும் சீரான போக்கு நிலவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான உதவி, தேவையான நேரத்தில் கிடைக்கும். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை பார்க்க தொடங்குவீர்கள். காலையிலிருந்து மந்தமான சூழ்நிலை இருந்தாலும், மாலை நேரத்தில் உங்கள் வேலை சரியாக முடிந்துவிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகளை கொஞ்சம் சமாளிக்க வேண்டும். எதிர்பாராத செலவு உங்களை கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருப்பீர்கள். சுயநலமாக சிந்திப்பீர்கள். இலாப நஷ்ட கணக்கு பார்க்காமல் எந்த ஒரு வேலையையும் கையில் எடுக்க மாட்டீர்கள். பயணங்களை தவிர்த்து விடுவீர்கள். சின்ன சின்ன எதிரி பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முன் கோபம் வேண்டாம். பேச்சில் கவனம் இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலையான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் மட்டுமே இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சின்ன சின்ன மன கசப்புகள் வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் பக்குவம் தேவை. இறைவழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. உடல் சோர்வு கூடாது. இந்த வேலையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. வேலையில் முழு கவனம் செலுத்துவதன் மூலம், வரும் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்களுடைய நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். சுபசெலவுகள் ஏற்படும். மனம்மகிழ்ச்சியாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சமூகமான போக்கு நிலவும். தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொண்டால் நிம்மதி இன்னும் கூடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். கொஞ்சம் தர்ம சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள். பெருசாக பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை. நல்ல அனுபவம் தான். வாழ்க்கையை பற்றிய நல்லது கெட்டதை தெளிவாக புரிந்து கொள்ள கடவுள் நல்லதொரு வாய்ப்பை கொடுக்கப் போகின்றார். பயன்படுத்திக் கொள்ளுங்கள் மனம் தளராதீர்கள்.



