பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எலிய சந்தியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிகம – பஸ்யால வீதியின் கல்எலிய சந்தியில் மிரிகம நோக்கி பயணித்த கன்டெய்னர் ரக வாகனம் ஒன்று, அதே திசையில் முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்எலிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மிரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக பாரவூர்தி வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Related Posts
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த...
இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும்
நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!
ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...
பசிலுக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற முடியாது! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார். மாத்தறை எளியகந்த வீதி,...
மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!
ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தின தியாகிகள் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை...
நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, நுவரெலியா மாவ்டத்தின் அம்பகமுவ சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி, பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கடைகள்...
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா...
நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ -...
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம் பெற்றது.-தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6...
நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மோதல்!
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் காரணமாகக் கூட்டம்...










