தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, நுவரெலியா மாவ்டத்தின் அம்பகமுவ சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி, பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கடைகள் போன்றன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அம்பகமுவ பிரதேச சபை, அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், அம்பகமுவ பிரதேச செயலக அலுவலகம், அம்பகமு பிரதேச சபை கினிகத்தேன பொலிஸ் மற்றும் அப்பகுதி அரச அரசாங்க அதிகாரிகள் இணைந்து, இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வில், அம்பகமுவ பிரதேச சபையின் கௌரவத் தலைவர் திரு. கபில நகந்தல அவர்கள் செயல் மிகு பங்களிப்பை வழங்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்
ஒரு உள்ளாட்சி அமைப்பாக, நாட்டில் நிலவும் தற்போதைய டெங்கு அபாய நிலையைக் கட்டுப்படுத்துவது எங்கள் பொறுப்பாகும்.
இன்று, இப்பகுதியில் உள்ள எங்களது சகோதர அரசு அமைப்புகளுடன் இணைந்து டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டமாக, எங்கள் அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள தொடர்புடைய இடங்களில் சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் பச்சை நிற ஸ்டிக்கர்களை ஒட்டுகிறோம்.
இவ்வாறு தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.
ஒரு உள்ளாட்சி மன்றமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சமூகம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம் என நம்புகிறோம் என்றார்.










