• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பாகுபாடின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் புதிய உலக வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம்.!

Mathavi by Mathavi
June 19, 2026
in இலங்கை செய்திகள்.
0
பாகுபாடின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் புதிய உலக வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம்.!
Share on FacebookShare on Twitter

எவ்வித பாகுபாடுமின்றி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகினுடைய வாய்ப்புகளுக்கு வழிகாட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே தற்போதைய அரசின் முதன்மை நோக்கமாகும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்துக்கு நேற்று மேற்கொண்ட உத்தியோகபூர்வ கல்விசார் கண்காணிப்பு விஜயத்தின்போது, குருநாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

இவ்விழாவில், கல்வி மற்றும் பாடநெறிசார் செயற்பாடுகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் பரிசில்களை வழங்கிப் பாராட்டினார். அத்துடன், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “ஆதர்ஷ பிரபா” இதழையும் அவர் இதன்போது வெளியிட்டு வைத்தார்.

பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
“இவ்வாறான பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இங்கிருக்கின்ற பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் நேரடியாகச் சந்திக்கும்போதே, நாட்டின் கல்வியை உயர் மட்டத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற எமது அரசின் உறுதிப்பாட்டை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற பெரும் ஊக்கம் எமக்குக் கிடைக்கின்றது. பிள்ளைகளின் முகங்களில் மகிழ்ச்சி தவழும், அன்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்த சூழலைக் கொண்ட பாடசாலைகளையே நாம் உருவாக்க விரும்புகின்றோம்.

கல்வித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இது வெறுமனே பாடத்திட்ட அபிவிருத்தி மாத்திரமல்லாது, கல்வித் துறையின் மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் என, புதிய உலகுக்குத் தேவையான திறன்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் பரந்த அளவிலான ஒரு கூட்டுச் செயற்பாடாகும்.

எதிர்காலத்தில் கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலுடன் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று, ஆசிரியர் பயிற்சிச் செயல்முறையை மிகவும் பலமான முறையில் சீரமைப்பதன் மூலம், மாணவர்களுக்குப் பயனுள்ள நவீன கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க எத்தனித்துள்ளோம்.

ஒரு நாடு என்ற வகையில் எம்முன் பல சவால்கள் உள்ளன. நீண்ட காலமாக எமது நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கியிருந்த கடுமையான பின்னடைவை நாம் இப்போதே படிப்படியாகச் சீர்செய்து வருகின்றோம். உலகளாவிய ரீதியிலும், காலநிலை ரீதியிலும் ஏற்படும் மாற்றங்கள் எமது நாட்டையும் பாதிக்கின்றன. ஆகையினால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே இந்தச் சவால்களை முறியடிக்கக் கூடியதாக இருக்கும்.” – என்றார்.

பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்து, குருநாகல் புனித பெர்ணடெட் மாதிரி ஆரம்பப் பாடசாலைக்கும் பிரதமர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அதன் பின்னர், மஹவ, ரிதிபெந்திஎல்ல பகுதியில் அமைந்துள்ள கஜநெக்கம மகா வித்தியாலயத்துக்கும் விஜயம் செய்த பிரதமர், அங்குள்ள ஆசிரியர் குழாமினருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, அப்பகுதி மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகப் பல்வேறு உட்கட்டமைப்புச் சிரமங்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் கிராமப்புற ஆசிரியர்களுக்குத் தனது கௌரவத்தையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய மற்றும் கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக குணசேன, கீதா ஹேரத், குருநாகல் பிரதேச சபை தலைவர் எம்.ஏ. விமலசிறி, மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

by selvan
June 19, 2026
0

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த...

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும்

by selvan
June 19, 2026
0

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு உத்தரவு!

by selvan
June 19, 2026
0

ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...

பசிலுக்கு எதிரான பிடியாணையை மீளப் பெற முடியாது! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

by selvan
June 19, 2026
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார். மாத்தறை எளியகந்த வீதி,...

மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு!

by selvan
June 19, 2026
0

ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தின தியாகிகள் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை...

நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

நுவரேலியாவில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

by selvan
June 19, 2026
0

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு,  நுவரெலியா மாவ்டத்தின் அம்பகமுவ சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி, பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கடைகள்...

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

by selvan
June 19, 2026
0

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா...

நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

நீதி இல்லாத நாட்டிற்கு நீதி அமைச்சர் எதற்கு? – செம்மணியில் போராட்டம்!

by selvan
June 19, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ -...

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் பரிட்சார்த்த புகையிரத சேவை முன்னெடுப்பு

by selvan
June 19, 2026
0

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் புகையிரத சேவையின் பரிட்சார்த்த நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம் பெற்றது.-தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவைகள் கடந்த 6...

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  மோதல்!

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  மோதல்!

by selvan
June 19, 2026
0

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் காரணமாகக் கூட்டம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி