YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் மாலைதீவு “Neurodiversity Association – Male” அமைப்பின் துணைத் தலைவி Aminath Azeema அவர்கள் கல்முனைக்கு வருகை தந்துள்ளார்.
இஸ்லாமிய புத்தாண்டான முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் பாடசாலையில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இக் கோரிக்கைக்கு உடனடி முக்கியத்துவம் அளித்த கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளை இப் பகுதிகளுக்கு வரவழைத்து சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதற்கிணங்க Aminath Azeema கல்முனைக்கு விஜயம் செய்தார்.
பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி, உபகரணங்கள் மற்றும் எதிர்கால தேவைகள் தொடர்பாக நேரடியாக கேட்டு அறிந்துகொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கான உதவிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூர் சமூகத்தின் தேவைகளை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுடன் இணைத்து செயல்படுத்தும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் tireless முயற்சிகள், எமது மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் பல நலத்திட்ட வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.










