• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

Mathavi by Mathavi
June 16, 2026
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!
Share on FacebookShare on Twitter

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பாலம் அமைக்கும் பணியை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 16.06.2026 இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகிலிருந்த பாண்டியன் வீதிப் பாலம் கடந்த டித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது.

குறித்த பாலம் உடைப்பெடுத்ததால் பாண்டியன் வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 03.11.2025 அன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்டதுடன், உடைப்பெடுத்த குறித்த பாலத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பாண்டியன் வீதிப் பாலத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக உரிய தரப்பினரை வலியுறுத்தி வந்தார்.

கடந்த 14.05.2026 அன்று இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இப்பாலத்தினை சீரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும், வீதியால் பயணிப்போருக்கும் ஆபத்தினை ஏற்படுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ள அந்த சேதமடைந்த பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை விரைவாக மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.

அந்தவகையில் இந்த பாலத்தின் சீரமைப்பு வேலைகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், விரைவில் சேதமடைந்த பாலத்தினைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இவ்வாறாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியதற்கமைவாக குறித்த பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பாலத்தை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிலமைகளை நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.

அத்தோடு வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளருடன் தொலைபேசியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், விரைவாக பாலத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு தெரிவித்தார்.

அதேவேளை விபத்துக்கள் ஏற்படாதவாறு பாலம் அமைக்கும் இடத்தைச்சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இயல்தகு விரைவில் குறித்த பாலத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், விபத்துக்கள் ஏற்படாதவாறு குறித்த பாலம் அமைக்கும் இடத்தைச்சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதாகவும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

by selvan
June 16, 2026
0

"புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளை கூற முடியும்." -...

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

by selvan
June 16, 2026
0

சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர்...

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

by selvan
June 16, 2026
0

2026ம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.!

by Mathavi
June 16, 2026
0

மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் - அழகான வாழ்க்கை'...

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

by Mathavi
June 16, 2026
0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல்...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு...

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

by Mathavi
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

by Mathavi
June 16, 2026
0

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள்...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி