மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் ‘தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 181 வீடுகளுக்காக தலா இரண்டு மில்லியன் ரூபாய் வீதம் 362 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் 181 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளையும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளையும் தேசிய வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ ரீ.பீ.சரத் அவர்கள் இன்றைய தினம்(16-06-2026) பயனாளர்களிடம் கையளித்தார்.
இந்த கையளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.













