• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் ஜனாதிபதி அநுர.!

Mathavi by Mathavi
June 11, 2026
in இலங்கை செய்திகள்.
0
இயலாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டும் ஜனாதிபதி அநுர.!
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் தவறான நிதி நிர்வாகம் மற்றும் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயக் கையிருப்புகள் முற்றாக இல்லாத நிலை காணப்பட்டது. எனினும், ரணில் விக்கிரமசிங்க தனது அரசைத் தேசிய மக்கள் சக்தி அரசிடம் ஒப்படைக்கும் போது, மகா திறைசேரியில் 800 பில்லியன் ரூபா கையிருப்பு இருந்தது.

தற்போதைய அரசு அதனை ஒரு வருடத்துக்குள் 900 பில்லியன் ரூபாவாக உயர்த்தியதாக எண்களைக் காட்டிப் பிரச்சாரம் செய்திருந்தாலும், தற்போது மகா திறைசேரியின் கையிருப்பு 620 பில்லியன் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசுக்கு 986 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்தது. எனினும், அந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை. டொலரின் மதிப்பைச் செயற்கையாகக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மே மாதத்தில் மாத்திரம் 223 மில்லியன் டொலர்கள் அரசின் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அரசு தமக்கிருந்த ரூபாய் கையிருப்பையும் அழித்து, வாகன இறக்குமதி மூலம் கிடைத்த பாரிய வரி வருமானத்தையும் வீணடித்துள்ளதுடன், இந்த நிதியைக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குரிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

மின்சார சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியவற்றுக்கு தலா 20 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்ட போதிலும், அவை உள்ளிட்ட கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம், சீனித் தொழிற்சாலை என்பன தற்போதைய ஆட்சியில் பாரிய நட்டத்தையே எதிர்நோக்கியுள்ளன. அரசுக்கு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிப் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் நாட்டின் சட்ட நிர்வாகம் திட்டமிட்டு முடக்கப்பட்டு, தேர்தல் செயல்முறைகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஜனநாயகம், சட்ட ஒழுங்கு, எரிபொருள் விலை மற்றும் ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தம்மால் இயலாவிட்டால் பதவியை விட்டு விலகுவதாகக் கூறிய வாக்குறுதிக்கு இணங்க உடனடியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாது இன்னும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான காரணத்தை நாட்டுக்கு அவர் வெளிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா பலாத்காரமாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு காண்கின்றார். எனவே, ரில்வின் சில்வா கூறுவதையா அல்லது தான் நாட்டுக்குக் கூறிய வாக்குறுதியையா ஜனாதிபதி செய்யப் போகின்றார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசு சர்வதேச நாணய நிதியத்தின் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை இன்னும் எட்டவில்லை. தற்போது 6.7 பில்லியன் டொலர் கையிருப்பே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் வரலாற்றில் இல்லாதவாறு பெருமளவு பணம் வீணடிக்கப்பட்டு, அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் அரசியல் நாடகமாக்கப்படுவதால் பிரச்சினை அதிகரித்துள்ளதே தவிர தீர்வு கிடைக்கவில்லை.

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேக்கு சிறைச்சாலையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகவும், அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முழுமையாக எதிர்க்கின்றது. சுரேஷ் சலே தவறு செய்திருந்தால் அவருக்குச் சட்டப்படி முறையான விசாரணை மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே அரசும் எதிர்க்கட்சியின் ஒரு குழுவும் இணைந்து தயாரித்த திரைக்கதைக்கு இணங்க அவரை குற்றவாளியாக்க முயல்கின்றனர்.

அரசிடம் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்று உள்ளது. கைதிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் அநாகரிகமான சித்திரவதைகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் முட்டுக்கட்டை போடாது. ஆனால், விசாரணைகள் நியாயமான முறையில் அமைய வேண்டும்.” – என்றார்.

இறுதிவரை ரணவீரர்களுக்கு (முப்படையினருக்கு) எதிராகப் பேசாத தமது கட்சி, தற்போதைய அரசால் சீர்குலைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ரணவீரர்களின் சுதந்திரமான பணிச் சூழலை மீண்டும் நிலைநாட்டத் தொடர்ந்து போராடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க்குற்றமே!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க்குற்றமே!

by selvan
June 11, 2026
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றமாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற...

பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

பாரதிராஜாவின் மறைவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இரங்கல்!

by selvan
June 11, 2026
0

தமிழ் சினிமாத் துறையில் புரட்சியை உண்டு பண்ணிய இயக்குனர் திலகம் பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட...

மானிப்பாய் பிரதேச சபையின் ஊழல் அம்பலம்!

மானிப்பாய் பிரதேச சபையின் ஊழல் அம்பலம்!

by selvan
June 11, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் ஒரு மாதத்தின் பின்...

இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தார்மீக கடமை தமிழக முதல்வருக்கு உண்டு!

இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தார்மீக கடமை தமிழக முதல்வருக்கு உண்டு!

by selvan
June 11, 2026
0

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒரு 'ஈழத்து மருமகன்' என்ற ரீதியில், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்று...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – நேற்று மட்டும் 867 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – நேற்று மட்டும் 867 பேர் கைது!

by selvan
June 11, 2026
0

'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட விசேட அதிரடிச் சுற்றிவளைப்புகளில் மாத்திரம் 867 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

by selvan
June 11, 2026
0

மணல் அனுமதிக்க படாத பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியாச்சகர் பிரிவுக்கு உட்பட்ட...

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் காணி விடுவிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் காணி விடுவிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

by selvan
June 11, 2026
0

வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக்...

சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் – அரச தரப்பு வாதம்!

சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் – அரச தரப்பு வாதம்!

by selvan
June 11, 2026
0

தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் என...

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைவு!

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைவு!

by selvan
June 11, 2026
0

அனைத்து மதத் தலைவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்த்து, அதன் மூலம் நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை நோக்கிப் பணியாற்றுதல்" என்ற கருப்பொருளுடன், ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திட்டத்தின் கீழ்,...

சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா? – ஆராய்ந்த பின்னே அனுமதி.!

சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா? – ஆராய்ந்த பின்னே அனுமதி.!

by Mathavi
June 11, 2026
0

நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து குறித்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி