• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தார்மீக கடமை தமிழக முதல்வருக்கு உண்டு!

selvan by selvan
June 11, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தார்மீக கடமை தமிழக முதல்வருக்கு உண்டு!
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒரு ‘ஈழத்து மருமகன்’ என்ற ரீதியில், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்று அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் இழுவைமடித் தொழில்
இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தினை முன்னிட்டு 60 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவைமடி மீன்பிடித் தொழிலானது, எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பமாகவிருக்கின்றது.

இந்தியாவில் இழுவைமடித் தடை நீங்குவது அந்த நாட்டு மீனவர்களுக்கு வசந்த காலமாக இருக்கலாம். ஆனால், அது எமக்குக் கடுமையான அழிவுக் காலமாகும்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையானது ஏறத்தாழ 23 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. எமது அரசிடமும் இந்தியத் தரப்பிடமும் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தும், இழுவைமடித் தொழிலை முழுமையாக நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் இரு நாட்டு அரசுகளும் எடுக்கவில்லை.

இது தொடர்பில் பல பேச்சுகள் நடத்தப்பட்டு எட்டப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கும் இரு தரப்பும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னர் இருந்த தமிழக முதலமைச்சர்களை விடவும், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் எம் மீது அதிக கருணை கொண்டு எமது மீனவர் பிரச்சினையில் தலையிட்டு ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான நேரடிப் பேச்சு ஒன்று இடம்பெற்று, இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பில் ஒரு இறுதியான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் இலங்கை அரசாங்கம் முனைப்பாகச் செயற்படவில்லை.

நாடாளுமன்றத்தில் இழுவைமடித் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், அது நடைமுறையில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கடாடிய போது, அந்த வழக்கைச் சட்டமா அதிபர் திணைக்களமும் அரசியல்வாதிகளும் இணைந்து திட்டமிட்டுப் பலவீனப்படுத்தி விட்டார்கள்.

ஊர்காவற்றுறையில் உள்ள இழுவைமடிப் படகுகள், காரைநகரில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் தங்களைப் பதிவு செய்துவிட்டே தொழிலுக்குச் செல்கின்றார்கள். இழுவைமடிப் படகுகள் கடலில் மீன்பிடிப்பதற்குக் கடற்படையே அனுமதி வழங்குகின்றது.

கடந்த மே தினக் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவதற்காகக் கடற்றொழில் அமைச்சினுடைய அலுவலக அதிகாரிகள், இழுவைமடித் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

‘உங்களுக்கான சட்டத்தை நீடித்து அதன் தன்மையைக் குறைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். எனவே எமது மே தினக் கூட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்’ எனக் கோரியதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் மூலம் கடற்றொழில் அமைச்சரும் எமக்கு எதிராகவே செயற்படுகின்றார் என்பது புலனாகின்றது. இது எமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இனியாவது எமது அரசு இந்த இழுவைமடிப் படகுகள் விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை கடற்பரப்பில் இழுவைமடித் தொழிலை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘வாரத்தில் குறைந்தது இரண்டு இழுவைமடிப் படகுகளையாவது கைது செய்யுங்கள்’ என வலியுறுத்தி, அஞ்சல் அட்டைப் பிரசாரம் ஒன்றின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

எமக்கு வெகுவிரைவில் முறையானதொரு தீர்வு கிடைக்காவிடின், முல்லைத்தீவிலிருந்து நெடுந்தீவு வரை ஒட்டுமொத்த மீனவர்களையும் ஒன்றிணைத்துக் பாரிய கடல்வழிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

Related Posts

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க்குற்றமே!

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க்குற்றமே!

by selvan
June 11, 2026
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றமாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற...

பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

பாரதிராஜாவின் மறைவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இரங்கல்!

by selvan
June 11, 2026
0

தமிழ் சினிமாத் துறையில் புரட்சியை உண்டு பண்ணிய இயக்குனர் திலகம் பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட...

மானிப்பாய் பிரதேச சபையின் ஊழல் அம்பலம்!

மானிப்பாய் பிரதேச சபையின் ஊழல் அம்பலம்!

by selvan
June 11, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் ஒரு மாதத்தின் பின்...

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – நேற்று மட்டும் 867 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – நேற்று மட்டும் 867 பேர் கைது!

by selvan
June 11, 2026
0

'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட விசேட அதிரடிச் சுற்றிவளைப்புகளில் மாத்திரம் 867 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

by selvan
June 11, 2026
0

மணல் அனுமதிக்க படாத பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியாச்சகர் பிரிவுக்கு உட்பட்ட...

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் காணி விடுவிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் காணி விடுவிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

by selvan
June 11, 2026
0

வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக்...

சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் – அரச தரப்பு வாதம்!

சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் – அரச தரப்பு வாதம்!

by selvan
June 11, 2026
0

தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் என...

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைவு!

நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைவு!

by selvan
June 11, 2026
0

அனைத்து மதத் தலைவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்த்து, அதன் மூலம் நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை நோக்கிப் பணியாற்றுதல்" என்ற கருப்பொருளுடன், ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திட்டத்தின் கீழ்,...

சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா? – ஆராய்ந்த பின்னே அனுமதி.!

சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா? – ஆராய்ந்த பின்னே அனுமதி.!

by Mathavi
June 11, 2026
0

நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து குறித்த...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; பலர் கைது.!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; பலர் கைது.!

by Mathavi
June 11, 2026
0

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நேற்று புதன்கிழமை (10) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 615 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி