பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் நேற்று புதன்கிழமை (10) நபர் ஒருவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் படிவெல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில், கணவனால் தாக்கப்பட்டதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சந்தேகநபர் படிவெல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருவரினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிங்கிரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










