ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அந்த நாட்டு ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தமது வான்படை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்இத்துள்ளன.
இந்த நிலையில், ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இஸ்ரேலை நோக்கி வரும் ஈரானிய ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்பதற்காகத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக இயங்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் தங்களது படைகள் ‘தயார் நிலையில்’ (High alert) வைக்கப்பட்டிருந்ததாக இராணுவம் சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானிய உயர் அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையிலேயே, இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.









