• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

selvan by selvan
June 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக அசைத்துவிட முடியாது என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரம் என்பது ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொதுமக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுமே தவிர, எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படாது.

எங்களுக்கு எதிராக அரசியல் செய்யும் மாற்றுக் கட்சியின் தலைவர்கள் கூட ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களிடம் எந்தவித அரசியல் பழிவாங்கல்களோ அல்லது அநீதிகளோ காட்டப்பட மாட்டாது.

ஜனாதிபதி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்தபோது குறிப்பிட்டதைப் போல, அதிகாரத்தை எந்த எல்லைக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு எங்களுக்கு உள்ளது.

இந்த அதிகாரம் எங்களது குடும்பத்தினரின், உறவினர்களின் அல்லது தனிப்பட்டவர்களின் நலன்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது.” – என்று உறுதியளித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பலம் குறித்துப் பேசிய அமைச்சர்,

“எங்களுக்குப் பின்னால் மிகச் சிறந்த தொழிற்சங்கக் கட்டமைப்பும், மாணவர் இயக்கங்களும் தளம் அமைத்துக் கொடுத்துள்ளன. அத்துடன் நாட்டின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் விவசாயிகளின் அமைப்புகளும், பெண்களின் பேராற்றல் மிக்க மகளிர் முன்னணியும் எங்களோடு பயணிக்கின்றன.

நாடெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கும் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட வலுவானதொரு வலையமைப்பு தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது.” – என்று குறிப்பிட்டார்.

அரசியல் களத்தில் தங்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்துப் பதிலளித்த அவர்,

“எங்கள் தரப்பில் உள்ள தனி நபர்களை இலக்கு வைத்துத் தாக்கினாலும் அல்லது நாங்கள் பேசும் வார்த்தைகளைத் தவறாகக் கோடிட்டுக் காட்டி விமர்சித்தாலும் எங்களை வீழ்த்திவிட முடியாது. நாங்கள் விமர்சனங்களைத் தாங்கி, அவற்றுக்கு முகம்கொடுத்துப் பழகியவர்கள்.

எனவே, அவதூறுகளையோ, விமர்சனங்களையோ முன்வைத்து எங்களைப் பின்வாங்கச் செய்யலாம் என யாரும் எளிதாக எண்ணிவிட வேண்டாம். எங்களது அரசியல் என்பது எங்களின் சொந்த நலனுக்காக அன்றி, நாட்டின் எதிர்காலத்துக்காகவும், நாட்டின் பிள்ளைகளின் நலனுக்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது.” – என்று தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

Related Posts

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

by selvan
June 5, 2026
0

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

by Mathavi
June 5, 2026
0

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

மனிதர்களின் செயற்பாடுகளால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.!

மனிதர்களின் செயற்பாடுகளால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.!

by Mathavi
June 5, 2026
0

மனிதர்களின் செயற்பாடுகளால் (காடழிப்பு) யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதனாலேயே அவை கிராமங்களை நோக்கி வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி