• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை.!

Mathavi by Mathavi
June 5, 2026
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை.!
Share on FacebookShare on Twitter

மன்னார், சவுத் பார் (South Bar) பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயமானது எவ்வித முழுமையான கட்டுமானங்களும் இன்றி, முற்றிலும் சேதமடைந்த நிலையில் பல வருடங்களாக காணப்படுகின்றது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியில் குறித்த சட்டவிரோத அகழ்வு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புதையல் தோண்டப்பட்டதாக கூறப்படும் குறித்த சம்பவ இடத்தில், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சில தடயங்களும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அகழ்வு இடம்பெற்ற பகுதியில் திருஷ்டி நூல்கள், கற்கள் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் காணப்படுவதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியானது அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புனித ஜோசப் வாஸ் (Joseph Vaz) முனிவர் இலங்கைக்கு முதல் முறையாக வருகை தந்த பகுதிக்கு மிக அருகிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பகுதியில் உள்ள குறித்த ஆலயம் நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பழமையான ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சட்டவிரோத புதையல் அகழ்வு முயற்சி தொடர்பில் அப்பகுதி மக்களால் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பொலிஸார் இதுவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் மக்கள் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும், சட்டவிரோத புதையல் அகழ்வுகளையும் தடுக்க உரிய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு தகுந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

by selvan
June 5, 2026
0

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

by selvan
June 5, 2026
0

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

by Mathavi
June 5, 2026
0

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி