கொழும்பு, பொரளைப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் நேற்று நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்று பொரளை பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!
நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...
கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்
தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!
பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...
முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!
மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...
மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை
பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...
தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்
தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...
சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...
தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!
உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....
உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!
மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...
பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...










