• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?

Mathavi by Mathavi
June 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து, தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே நாமல் ராஜபக்ஷ எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாடும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான இந்த நாடளாவிய கைதும் கவலையளிக்கின்றன. பாடல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான விடயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இசையும் கலைத்துவ வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமானால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் இத்தகைய பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது அரசியல் நலன்களுக்காக இத்தகைய பாடல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்தார் என்று கூறப்படுகின்றது. அப்போது பொலிஸார் எங்கே இருந்தனர்? அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகவே இன்றும் காணப்படுகின்றது. புலிகள் அமைப்பின் கொள்கைகளை எவரும் ஊக்குவிப்பதையோ அல்லது வெளிப்படுத்துவதையோ நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனினும், ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், ஓர் இளம் பாடகரும் ஒரே மாதிரியான செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்புக் கிடைப்பதும், மற்றவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் முற்றிலும் தவறானதாகும்.

அரசியல் நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் சட்டத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண இளைஞர்களுக்கு பிறிதொரு சட்டமும் இருப்பது ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அரசு நம்பினால், அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்தக் கைது அதிகாரத்தைத் தெரிந்தெடுத்துத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயலாகவே பார்க்கப்படும்.” – என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

by selvan
June 5, 2026
0

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

by selvan
June 5, 2026
0

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

by Mathavi
June 5, 2026
0

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும்...

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி