பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணவிற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் கீழ் பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தன.
குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச் சாட்டுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச் சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரன சிறைத்தண்டனையும்
அத்துடன் முதலாவது குற்றச் சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனையும்
இரண்டாம் குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.










