• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!
Share on FacebookShare on Twitter

“எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய நிகழ்வில் பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஏனையோரையும் இவ்வாறான சாதனையாளர்களாக மாற்றத் தூண்டும் ஒரு சிறந்த முன்மாதிரி நிகழ்வாகவும் இது அமைகின்றது. சகல வசதிகளும் வாய்ப்புக்களும் இருப்பவர்கள் சாதிப்பது சமூகத்தில் பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், வறுமை நிலையில் இருந்து, வாய்ப்புக்களுக்காக ஏங்கி, பல இடங்களில் ஒதுக்கப்படும் நிலையில் இருப்பவர்கள் சாதிக்கும்போது, அது உண்மையான சாதனையாகத் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும்.

நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால், அது எமக்கும் நன்மையாகவே திரும்பக் கிடைக்கும் என்பது இயற்கையின் நியதியாகும். அதேபோல, தீமை செய்தால் அது எம்மையும் திருப்பித் தாக்கும். இன்று சிலர் தவறான வழிகளில் பணத்தைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வதைப் போலத் தோன்றினாலும், என்றாவது ஒருநாள் அவர்கள் அந்தத் தவறுக்காகக் கட்டாயம் வருந்தும் நிலைமை ஏற்படும்.

இன்றைய இந்தப் பெண் சாதனையாளர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் பலருக்கும் ஒரு சிறந்த படிப்பினையாகும். கஷடங்கள் வரும்போது நாம் தளர்ந்துவிடக் கூடாது என்பதற்கும், தடைகளைக் கண்டு நாம் எடுத்த முயற்சிகளைக் கைவிட நினைக்கும்போதும், இந்தச் சாதனையாளர்களின் கதைகள் எமக்கு நல்லதொரு உந்துசக்தியாக அமையும். கஷ்டங்களைக் கண்டு நாம் கலங்கினால், காணாமல் போய்விடுவோம். இன்றைய இளம் சமூகத்தினர் இவர்களிடமிருந்து நிச்சயம் இந்தப் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் விரக்தியடைந்திருப்பவர்கள் கூட இவர்களின் சாதனைப் பயணங்களைக் கேட்டால் மீண்டும் வீறுகொண்டு எழுவார்கள்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஒரு நேர்மையான அதிகாரியாவார். அவரின் இத்தகைய விருது வழங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் எதிர்காலப் போக்கை நிச்சயம் நல்வழியில் மாற்றியமைக்கும் என நம்புகின்றேன்.” – என்றார்.

இந்நிகழ்வில், பெண்களின் தலைமைத்துவம், தொழில்முனைவு, சமூக சேவை, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மற்றும் பல்வேறு சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு சிறந்த பெண்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் ‘அரியாத்தை விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், தொழில்முனைவில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் 16 பெண்களுக்கு ‘அரியாத்தை ஞாபகார்த்தப் பாராட்டுச் சான்றிதழ்கள்’ வழங்கப்பட்டன.

மேலும், அண்மையில் வெளியான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்த மாணவிகள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தலா 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வாழ்நாள் சாதனையாளர் திருமதி எஸ்.அகிலத்திருநாயகி கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சாதனைப் பெண்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Related Posts

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!

by Bharathy
May 20, 2026
0

"ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த...

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!

by Bharathy
May 20, 2026
0

வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்...

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!

by Bharathy
May 20, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார்...

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!

by Bharathy
May 20, 2026
0

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி...

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!

by Bharathy
May 20, 2026
0

"உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான...

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!!                                     யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

by Bharathy
May 20, 2026
0

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

by Bharathy
May 20, 2026
0

"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

by Bharathy
May 20, 2026
0

"நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே  முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

by Bharathy
May 20, 2026
0

ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி