மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று முன்னெடுக்கும் எந்தவொரு புதிய முயற்சியிலும் அதன் சட்டரீதியான அம்சங்களை கவனமாகப் பரிசீலிக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களில் பிறரிடம் ஆலோசனை பெற வேண்டி இருக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக காலம் சாதகமாக உள்ளது. இருப்பினும், ஏதோ ஒரு விஷயம் குறித்து உங்கள் மனம் சஞ்சலத்துடனே இருக்கும். தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒருவரின் உதவி உங்கள் வாழ்வில் அமைதியைக் கொண்டுவரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சினைகளை தீர்ப்பதில் சாதக பலன் கிடைக்கும். உங்களுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினால் நல்ல வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். பயணங்களின் மூலம் நீங்கள் மிதமான வெற்றியை அடைவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் காண்பீர்கள். உங்கள் மதிப்பும் உயரும். நிதி நிலையை மேம்படுத்த கூடுதல் கடின உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொண்டால் அதன் மூலம் மிகுந்த மனநிறைவை உணர்வீர்கள். பிறர் சொல்லக்கூடிய ஆலோசனைகளை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் கூட குழுவாக இணைந்து செயல்படுவது கடினமான பிரச்சினைகளுக்கு வெற்றியை பெற உதவும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் இதனால் உங்கள் வாழ்வில் அமைதியையும் ஆனந்தத்தையும் முழுமையாக உணரக்கூடும். மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகள் மீண்டும் உருவாகத் தொடங்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் திறமைகளை நிரூபிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்தவும். உங்கள் குடும்பத்தினர் சற்று அமைதியற்ற நிலையில் காணப்படுவார்கள். இதனால் உங்கள் மனக்கலக்கமும் அதிகரிக்கக்கூடும். வீட்டில் அமைதி நிலவும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரும். உண்மைகளை மட்டும் பேசுங்கள் மற்றும் பெரிய வாக்குறுதிகளை அளிப்பதைத் தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று உங்கள் அன்புக்குரியவர்களுக்காக சிறிய கடன் கொடுக்க நேரிடலாம். பிறருக்கு பொருளாதார ரீதியாக உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடினமான பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கிடைக்கும். உங்கள் யோசனைகள் மிகச் சிறந்ததாக இருக்கும். மேலும் உங்களின் ஆற்றல், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உங்கள் யோசனைகளைத் தெரிவிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இன்று பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வேலைகள் மற்றும் பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய நாளாக அமையும். உங்கள் வீட்டில் முடிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் அனைத்து வேலைகளையும் முடிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இன்றைய நாளின் பிற்பகுதியில், உங்கள் அன்புக்குரியவருடன் வெளியே செல்வதற்கு நீங்கள் திட்டமிடுபவர்கள். தொழிலில் எந்தவிதமான ஆபத்தான இடர்பாடுகளையும் எடுப்பது நன்மை பயக்காது. நீங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டால், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உங்கள் பழைய கடன்களைத் தீர்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சில அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காக செலவுகள் அதிகரிக்கலாம். பண பரிவர்த்தனை விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருங்கள். உங்களுக்குப் பயன்படாத பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். உங்களுடைய தனித்துவமான, புதிய சிந்தனைகள் பெரிதும் பாராட்டப்படும். தொழில் ரீதியாக, இன்று நீங்கள் உங்களைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். ஒரு புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மிகவும் பரபரப்பான நாளாக அமையும். நாளை முதல் வேலை தொடர்பாக கடினமான சூழ்நிலைகள் நிலவும். கடன் கொடுப்பது அல்லது வாங்கும் விஷயங்கள் உங்கள் சேமிப்பு நிலையை சரிபார்த்து செயல்படுவது நல்லது. முடிந்தவரை கடனை தவிர்ப்பது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களும் வெற்றிகரமாக அமையும். பயணத்தின்போது நீங்கள் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களோ, அந்த அளவுக்குச் சிறந்த பலன்களைப் பெற முடியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆக்கபூர்வமான மற்றும் புதுவிதமான பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாலை நேரத்தில் அத்தியாவசியமான பொருட்களை வாங்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் பெரியவர்களுடன் வாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது, பிறரின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது நல்லது. பிறரின் ஆலோசனைகளை குறித்து வைத்துக் கொள்வது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான வலிமையும் ஆற்றலையும் உணர்வீர்கள். காதல் விவகாரங்களில் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மிகச்சிறந்த நாளாக அமையும். பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுடைய உற்சாகத்தை அளவோடு வைத்திருப்பது நல்லது. உடல்நலத்தில் முன்னேற்றம் தென்படுகிறது. வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகள் உருவாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளின் முதல் பாதியில் சிறிய அளவிலான பண ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளது. எந்த வேலையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் கவனமாக செய்து முடிக்கவும். உங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அந்த வேலையை முடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் நினைத்த இலக்கை அடைவது மனதளவில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி உணர்வைத் தரும். வேலையில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். திடீர் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளின் முதல் பாதியில் சிறிய அளவிலான பண ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளது. எந்த வேலையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் கவனமாக செய்து முடிக்கவும். உங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அந்த வேலையை முடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் நினைத்த இலக்கை அடைவது மனதளவில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி உணர்வைத் தரும். வேலையில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். திடீர் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் சில விஷயங்களை நினைத்து அதிக சிந்தனையில் இருப்பீர்கள். எதிரிகளிடமிருந்து வரக்கூடிய எந்த ஒரு விமர்சனத்தையும் புறக்கணிக்க வேண்டாம். உங்கள் பணிகளை சரியாக ஆராய்ந்து செய்யவும். வெற்றி உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய சமூக வட்டம் விரிவடைய வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய மதிப்பு மற்றும் கௌரவம் உயரும். உங்கள் நிதி நிலைமை நிலையாக இருக்கும். பணம் தொடர்பான அபாயகரமான அல்லது உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.



