உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புளியங்குளம் வைத்தியசாலையை பார்வையிட்ட சத்தியலிங்கம் எம்பி ; தேவைப்பாடுகள் தொடர்பில் நேரில் ஆய்வு.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று ஏப்ரல் 04 ஆம் திகதி களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலை சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வைத்தியசாலையின் உடனடியான தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை சமூகத்தினருடன் கலந்துரையாடி கேட்டறிந்துகொண்டார். மேலும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய உடனடியான திருத்தவேலைகள் தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

உடனடியாக செய்துமுடிக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினரை தொடர்புகொண்டு அறிவுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய விடயங்கள் தொடர்பில் அமைச்சுமட்ட கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, பிரதேசசபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், க.சரோஜாதேவி, பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளர் தவேந்திரராசா (அமலன்) ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0