• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தொழிற்சங்க நடவடிக்கை மென்மேலும் தீவிரமாகும்.!

Mathavi by Mathavi
February 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
தொழிற்சங்க நடவடிக்கை மென்மேலும் தீவிரமாகும்.!
Share on FacebookShare on Twitter

தீர்க்கப்படாத தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் இலவச பொதுச் சுகாதார மற்றும் வைத்தியசாலைக் கட்டமைப்பை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையை மென்மேலும் தீவிரப்படுத்தத் தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி தமது அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர தமது மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சமூகம் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் தொழில்சார் சவால்களையே இந்த நடவடிக்கை பிரதிபலிக்கின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக வசதிகள் அல்லது கொடுப்பனவுகள் அன்றி, பெரும்பாலும் தனிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ சேவைத் தேவைகளுக்கு அப்பால் வைத்தியர்கள் ஆற்றி வந்த பணிகளிலிருந்து விலகியிருப்பதே தற்போதைய நடவடிக்கையாகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு அசௌகரியத்துக்கும் அரசும் சுகாதார அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மருத்துவ இடமாற்றங்களுடன் தொடர்புடையது எனச் சில தரப்பினரால் பரப்பப்படும் கருத்துக்களை அந்தச் சங்கம் நிராகரித்துள்ளது.

இடமாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக சுமார் 8 ஆயிரம் மருத்துவ இடமாற்றங்கள் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில அதிகாரிகளால் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களால் முரண்பாடான பகிரங்க அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், இது அமைச்சுக்கும் அமைச்சரின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடின்றி முறையான நடைமுறைகளின் கீழ் மருத்துவ இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 23 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தமது சங்கம் கோருகின்றது என்றும், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை பரந்த அளவிலான கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து வகை வைத்தியர்களையும் உள்ளடக்கிய பிரத்தியேகமான இலங்கை வைத்திய சேவை ஒன்றை உருவாக்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுதல், 22/99 சுற்றறிக்கைக்கு இணங்க போக்குவரத்து தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல், மேலதிக பணி கொடுப்பனவை நிரந்தர பலனாக மாற்றுதல், ஆய்வு கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களைத் தீர்த்தல், முதுகலை பயிற்சி வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் மற்றும் பொதுச்சுகாதாரக் கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை இற்றைப்படுத்துதல் ஆகியன இந்தக் கோரிக்கைகளில் அடங்கும்.

எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சுடன் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேச்சுகளை நடத்துமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

அரசும் சுகாதார அமைச்சும் தமது கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த ஏகமனதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, பொதுச் சுகாதாரத் துறையின் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைமையகத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Posts

சற்றுமுன் விமல் வீரவன்ச கைது.!

சற்றுமுன் விமல் வீரவன்ச கைது.!

by Mathavi
May 25, 2026
0

மே 18 பத்தரமுல்ல தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம...

தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

by Mathavi
May 25, 2026
0

"மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று...

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 25, 2026
0

திருகோணமலையில் இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே...

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், எனினும் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொ*லை வழக்கு குற்றவாளி உயிர்மாய்ப்பு.!

by Mathavi
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த...

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

by selvan
May 25, 2026
0

இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய அரசு தனது தலைக்கனத்தைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட இணக்கப்பாட்டை நோக்கி நகர...

அரசின் இயலாமையால் சகல துறைகளும் முடக்கம் – நாமல் சாடல்!

by selvan
May 25, 2026
0

பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் வேகமாக உருகி மறைந்து வருகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 24, 2026
0

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு...

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

by Mathavi
May 24, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின்...

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி