உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு பிரதேசத்தில், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் துப்பாக்கிகளை வைத்திருந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் இன்று (29) கைது செய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இன்று காலை வாகரை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பி. பி. அமில தலைமையிலான குழுவினர் குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அந்த நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் நான்கு மீட்கப்பட்டதுடன், 28, 32, 42 மற்றும் 48 வயதுகளைக் கொண்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கிகளைக் கொண்டு வேட்டையாடி வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0