கம்பஹா, மீரிகம தேசிய பாடசாலைக்கு அருகில், கனரக வாகனம் உந்துருளி மீது மோதியதில் பலத்த காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி நவகமுவ, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷானி ஷனயா எனவும் மீரிகம டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பு படிக்கும் மாணவி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்ததும் பிரதான வீதிக்கு வந்த பாடசாலை மாணவி, மீரிகம நோக்கி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளியில் ஏறியுள்ளார்.
ஓட்டுநர் உந்துருளியை இயக்கி பஸ்யால நோக்கி திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனரக வாகனம் உந்துருளியில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அதன் சக்கரம் ஒன்றில் சிக்கியுள்ளார்.
உந்துருளியை ஓட்டிச் சென்ற இளைஞன் காயமின்றி தப்பியதாகவும், காயமடைந்த மாணவி மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related Posts
அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!
அம்பாறையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு...
தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...
சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின் அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என...
12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், அனுராதபுரம் மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட இரு வேறு முற்றுகைகளின் போது,...
அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம் அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!
தேர்தலுக்கு முன்னர் மக்களே தங்களது பாதுகாப்பு என்றும், தமக்கு பாதுகாப்புப் படையினர் தேவையில்லை என்றும் கூறிய தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம்...
சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!
சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம், ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும்,...
கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கராத்தேயில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி!
கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற...
குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக் கொ*லை! – சகோதரன் கைது
குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தடியால் அடித்துப் படுகொ*லை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபருக்கும் அவருடைய...
மோட்டார் சைக்கிள் கோர விபத்து! – 21 வயது இளைஞர் பலி!
புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம வீதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிள்...
இனவாதிகள், மோசடியாளர்கள் எதிரணியுடன் இணைவார்கள் என்பதை தயாசிறி எம்.பி ஏற்றுக்கொண்டுள்ளார்!
"தேர்தல் காலத்தில் இனவாதிகள், படுகொலையாளர்கள் மற்றும் அரச நிதி மோசடியாளர்கள் அனைவரும் தங்களது அணியுடன் ஒன்றிணைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமையானது எதிர்க்கட்சியின் உண்மையான...










