• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மலேரியா தாக்கம் குறித்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை.!

Mathavi by Mathavi
August 8, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
மலேரியா தாக்கம் குறித்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை.!
Share on FacebookShare on Twitter

மலேரியா தாக்கம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மலேரியா நோய் பரம்பல் பூரணமாக ஒழிக்கப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் உள்ளூரில் பரவும் மலேரியா நோயாளர்கள் யாரும் எமது நாட்டில் இனங்காணப்படவில்லை. ஆயினும், உலகில் பல நாடுகளில் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென்அமெரிக்கா கண்டங்களில் உள்ள பல நாடுகளில் மலேரியா நோயின் பரம்பல் இன்னமும் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் எமது நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஐரோப்பிய, வடஅமெரிக்க கண்டங்களுக்கு சட்ட விரோதமாக சென்று குடியேறும் நோக்குடன் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். இவர்களில் பலர் ஐரோப்பிய, வட அமரிக்க கண்டங்களுக்குச் செல்ல முடியாது பல மாதங்களாக ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்து விட்டு எமது நாட்டிற்கு மீண்டும் திரும்பி வரும் போது அவர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறாக எமது நாட்டில் கடந்த பல வருடங்களாக அதிக மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் 2021 ஆம் ஆண்டு 26 பேரும், 2022 இல் 37 பேரும், 2023 இல் 62 பேரும், 2024 இல் 38 பேரும், 2025 இல் 29 பேரும் நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறே யாழ் மாவட்டத்திலும் 2021 ஆம் ஆண்டு 2 பேரும், 2022 இல் 7 பேரும், 2023 இல் 6 பேரும், 2024 இல் 2 பேரும், 2025 இல் இது வரையான காலப்பகுதியில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஆபிரிக்க நாடான டோகாவிற்குச் சென்று கடந்த ஜூலை 30 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய 2 நோயாளர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. முதலாவது நோயாளி நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி நெடுந்தீவை வந்தடைந்துள்ளார். இவர் ஏற்கனவே வேறு பல நோய்களுக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி நோயாளியுடன் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரும் டோகா நாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பியுள்ளார். இத்தகவல் கிடைத்ததுமே மலேரியா தடுப்பு இயக்க உத்தியோகத்தர்கள் இவருக்கு மலேரியா பரிசோதனைகளை மேற்கொண்ட போது இவருக்கும் Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்த நோய் அறிகுறிகளோ காணப்படவில்லை. இருப்பினும், இவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மலேரியாவிற்கான பூரணமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 நோயாளிகளைப் பொறுத்த வரையில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக தமது மலேரியா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

எமது நாட்டில் மலேரியா நோயின் உள்ளூர் பரம்பல் முற்றாக ஒழிக்கப்பட்டாலும் மலேரியா நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் இன்னமும் காணப்படுகின்றன. எனவே, மேற்படி நோயாளர்களிடம் இருந்து அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மலேரியா நோய் பரவாதிருக்க அவர்களது வதிவிடங்களைச் சுற்றி நுளம்புகளுக்கான பூச்சியியல் ஆய்வும், நுளம்புகளை அழிக்கும் புகையூட்டல் நடவடிக்கைகளும் வீடுகளுக்கான நுளம்பு கொல்லி மருந்துகளை விசிறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்குடன் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பொது மக்கள் பண்ணையில் அமைந்துள்ள மலேரியா தடுப்புப் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அவர்கள் அந்த நாடுகளில் தங்கியுள்ள காலப்பகுதியில் இத்தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் மலேரியா நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அடுத்ததாக மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் நாடு திரும்பியவுடன் மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையை எமது வைத்தியசாலைகளில் மேற்கொண்டு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது மக்கள் அனைவரும் மலேரியா பரம்பல் அதிகமாகக் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்குச் செல்லும் போது மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு எமது நாட்டில் மலேரியா நோய் பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 21, 2026
0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரளுகஹபிட்டிய பகுதியில் உள்ள களு கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை (20) களு...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி