தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் உந்துருளியில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார். தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பொலிஸார் சி.சி.டிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Posts
விசேட BMD ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!
கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட விசேட பிஎம்டி (Ballistic Missile Defence – BMD) ரக ஏவுகணை...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக...
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மீனவர்கள்.!
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று...
நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை!
நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி...
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து...
2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!
மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்....
தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகல்!
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்...
கரூர் சம்பவம் தொடர்பில் மீண்டும் சிபிஐ விசாரணை ஆரம்பம்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...
தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து!
டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில...
இந்திய குடியரசுத் தலைவருக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் இடையில் சந்திப்பு.
டெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர்...










