தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் மண்டபம் வடக்கு துறைமுக கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்த்திற்கிடமான வகையில் இருந்த ஒரு இடத்தை சோதனை செய்த போது, அங்கு 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மர்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், கைப்பற்றப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 45 இலட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனா்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் பொலிஸாா் ஒப்படைத்தனா்.
Related Posts
மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...
இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !
இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறுகிறதுசுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத தகுதி பெற்றனர்.முறைகேடுகளை தடுப்பதற்காக...
இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!
கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
தவெக அரசுக்கும், பா.ஜ.க வுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஒரு வரியோ அல்லது ஓர் எழுத்தோ கூட மாற்றாமல் ஆளுநர் அப்படியே வாசித்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
நீட் மறுதேர்வுக்கு முன்னதாக சமூக ஊடகத்தளமான டெலிகிராம் (Telegram) மீது விதிக்கப்பட்ட தற்காலிகக் கட்டுப்பாடுகளை டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (19) உறுதிப்படுத்தியது.அவசரநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு,...
ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும்!
ஜூன் 19,22,23 ஆம் திகதிகளில் தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபை...
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (18) ‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்வுகளைத் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு செய்யும் தனது நீண்டகால மரபைப் பின்பற்றியது. கடந்த மே...
சட்டமன்ற வளாகத்திற்குள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக்...
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ...
இந்திய அரசுக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் வழக்குத் தாக்கல்!
இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின்...










