வவுனியா மாநகர சபையின் முதலாவது பொதுக்கூட்ட அமர்வு செங்கோலுடன் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமாகியது.
மாநகர முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றுவரும் இவ் அமர்வில் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன், மாநகர ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மாநகரசபையின் முதலாவது பொதுக் கூட்டத்தில் செங்கோல் சகிதம் முதல்வர் சபை மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டத்தில் குழுக்கள் அமைப்பு மற்றும் மாநகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.



