யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவக் கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடரின் 330 ஆவது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வரும், சாதனைத் தமிழனுமான கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் காலை 10:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் வெளியீட்டுரையினை ஆசிரியர் ச.வாகீசன் அவர்களும், மதிப்பீட்டுரையினை பாடசை அதிபர் க.கைலைநாதன் அவர்களும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினரால் கொழும்பு அருங்காட்சியகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து, தேசாபிமானி என்னும் விருதும், மனித உரிமைகளிற்கான மாகாண இயக்குனர் என்ற பதவி நிலையினையும் வழங்கி மதிப்பளிக்கப்பட்ட சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சந்நிதியான் ஆச்சிரம சைவக் கலை பண்பாட்டுப் பேரவையினரால் கௌரவிக்கப்பட்டார்.













