• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக
அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவு!

selvan by selvan
June 27, 2026
in இலங்கை செய்திகள்.
0
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மருத்துவமனை வரலாற்றில் உலக சுகாதார அமைப்பின் இத்தகைய உயரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது மருத்துவமனையாக அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை முன்னிட்டு, தேசிய தொற்று நோய்கள் நிறுவன வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கௌரவிப்பு விழாவும் புதிய நினைவுப் பலகைத் திறப்பு விழாவும் நடைபெற்றன. இந்நிகழ்விற்குச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமை தாங்கியதோடு, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்கா குணசேகரவும் இதில் விசேட விருந்தினராகப் பங்கேற்றார்.

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ புதிய நினைவுப் பலகையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

“நாட்டின் சுகாதாரத் துறையில் இந்த நிகழ்வை ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விசேட மைல்கல்லாகக் கருதலாம். பல ஆண்டுகளாக எமது மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், ஆய்வக வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் வழங்கி வரும் தரமான மருத்துவச் சேவை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குக் கிடைத்த கௌரவமே இந்த சர்வதேச அங்கீகாரமாகும்.

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 2030 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ ஒத்துழைப்பு மையமாக இந்த நிறுவனம் செயல்படவுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் இங்கு ஆரம்பிக்கப்பட்ட முறையான டெங்கு பயிற்சித் திட்டங்கள், இன்று நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்கும் திறமையான மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதற்கான அடித்தளமாக மாறியுள்ளன.” – என்றார்.

இதுவரை காலமும் இலங்கையின் சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு மற்றும் தொற்றுநோயியல் சார்ந்த உயர்கல்வி மற்றும் பயிற்சிகளைப் பெறுவதற்காகப் பெருமளவிலான நிதியைச் செலவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வந்தனர். ஆனால், தற்போதைய இந்த சர்வதேச அங்கீகாரத்தின் மூலம், பிற நாடுகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து டெங்கு தொடர்பான கோட்பாட்டு மற்றும் மருத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வரலாற்று வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமானது பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளின் மருத்துவக் குழுக்களுக்கு டெங்கு நோய் குறித்த விசேட மருத்துவ வழிகாட்டல்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த மையம் எட்ட வேண்டிய முக்கிய இலக்குகளையும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான முகமைப் பிரதானி வைத்தியர் மொமோ டகேச்சி, தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, அமைச்சின் மேலதிக செயலாளர் கே.பி. யெகச்சந்திரா, பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். எம். அர்னால்ட், டாக்டர் பிரதீப் விஜேசிங்க, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர உட்பட மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார வல்லுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும்...

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

by Mathavi
June 27, 2026
0

வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் என்பன சேதமடைந்துள்ளன....

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம்.!

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 27, 2026
0

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அதன் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இன்று காலை 10:30 மணிளவில் ஆரம்பமாகியது. இதில்...

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் மீது விசாரணை.!

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் மீது விசாரணை.!

by Mathavi
June 27, 2026
0

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!

மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!

by Mathavi
June 27, 2026
0

மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

லசந்த, தாஜுதீன், பிரகீத் கொ*லைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்?

by Mathavi
June 27, 2026
0

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொடூரப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியங்களையும், உளவுத்துறைத் தகவல்களையும் திட்டமிட்ட முறையில் மூடி மறைத்த முக்கிய புள்ளிகள்...

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

by Mathavi
June 27, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றிக் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை...

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

by Mathavi
June 27, 2026
0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

by Mathavi
June 27, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி