• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள்..!

admin by admin
June 25, 2025
in உலக செய்திகள்
0
மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள்..!
Share on FacebookShare on Twitter

சவூதி அரேபியாவின் மன்னரும், இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் விளங்கும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டிவரும் மனிதபிமானம், மனிதநேயம், சகோதரத்துவம் மிகுந்த தலைவராகவும் திகழ்கின்றார்.

மன்னர் சல்மான், 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் மன்னராக பொறுப்பேற்றதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புற்ற மக்களுக்கு உதவுவதிலும், உலக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர் ஆற்றிவரும் நற்பணி உலக மக்களால் புகழப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இயற்கை அனர்த்தங்கள் உட்பட உலகில் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும், சவூதி அரசாங்கம், மன்னர் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ், உடனடியாக நிவாரண உதவிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

மன்னர் சல்மானுடைய மனிதாபிமானப் பணியின் முக்கிய அமைப்பாக “மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் ” (King Salman Humanitarian Aid and Relief Centre – KSRelief) இயங்கி வருகிறது. இவ் அமைப்பானது உலக நாடுகளின் நம்பிக்கையின் மையமாக இன்று மாறியுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், பேரழிவுகள், பசி, பட்டிணி, வறுமை, என எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்குத் தேவையான உதவிகளை மிகச் சிறப்பாக வழங்கி வரும் அமைப்பாக இது காணப்படுகிறது.

இவ் அமைப்பானது மக்கள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை தவிர்க்க உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல், வறுமை ஒழிப்பிற்காக உணவுப் பொருட்கள் விநியோகம், அகதிகளுக்கான தங்குமிடம், உணவு, மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை எமன், பலஸ்தீன், சிரியா, துருக்கி, ஸ்ரீலங்கா போன்ற 100 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இவ் அமைப்பு செய்து வருகின்றது.

2015 இல் நிறுவப்பட்டதிலிருந்து, KSrelief 100 இற்கு மேற்பட்ட நாடுகளில் 3,100 இற்கும் மேற்பட்ட திட்டங்களை செயற்படுத்தியுள்ளது. இதற்கான மொத்தப் பங்களிப்பு சுமார் 7.1 பில்லியன் ஆகும். அவ்வாறு, 1996 – 2024 காலப்பகுதிக்குள் சவூதி அரேபியா இதுவரையில் 170 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவியாக 130 பில்லியனுக்கும் மேற்பட்ட உதவிகளையும் வழங்கியுள்ளது எனலாம்.

இவை அனைத்தும் சவூதி அரேபியாவினுடையதும், மன்னனுடையதும் மனிதநேயம் சார்ந்த தாராளப் பண்புகளின் வெளிப்பாடுகளே. உலகம் முழுவதும் பாராட்டப்படும் மன்னர் சல்மானின் சேவைகளை ஐ.நா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன.

அவரது பணிகள் உலக மனிதநேயம் வளர்ச்சிக்கு மிகுந்த பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் சவூதி அரேபியா உலகில் மனிதநேயமிக்க நாடாக அனைவராலும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள் உலகுக்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

Related Posts

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

சர்வதேச பங்குச் சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்

by selvan
June 12, 2026
0

அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பொது வர்த்தக நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாக நிதி நிறுவனங்களிடமிருந்து 75...

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை!

by selvan
June 12, 2026
0

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

இங்கிலாந்தில் பாடசாலையில் கத்திக்குத்து – 14 வயது சிறுமி கைது!

இங்கிலாந்தில் பாடசாலையில் கத்திக்குத்து – 14 வயது சிறுமி கைது!

by selvan
June 12, 2026
0

இங்கிலாந்தின் மான்செஸ்டர் (Manchester) நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 3 இந்திய மாலுமிகள் பலி!

by selvan
June 12, 2026
0

ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ்...

ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஹஸன் யூசுப் இஸ்ரேலால் விடுதலை!

ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஹஸன் யூசுப் இஸ்ரேலால் விடுதலை!

by selvan
June 12, 2026
0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஹஸன் யூசுப் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவரது மகனை மேற்கோள் காட்டி இந்த...

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

ஈரான் மீது திட்டமிட்டிருந்த தாக்குதலை கைவிடுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

by selvan
June 12, 2026
0

ஈரானிய உயர்மட்டத் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளைத் தான் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

அமெரிக்கா திட்டமிட்டு போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு!

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை! – ஈரான் அறிவிப்பு!

by selvan
June 12, 2026
0

அமெரிக்காவுடனான சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளில் தனது "சிவப்பு கோடுகளை" (Red Lines) ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஈரானிய...

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல்!

by selvan
June 12, 2026
0

குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ராடார் கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதலில், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ராடார் வசதிகள் மற்றும் வானூர்தி போக்குவரத்து மேலாண்மை உபகரணங்களுக்குக்...

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறப்பு!

by selvan
June 11, 2026
0

மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்புப் பதற்றத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைத்தின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

by selvan
June 11, 2026
0

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (11) மிக வேகமாக உயர்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி