ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (25) திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
வடகிழக்குக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் திருகோணமலைக்கும் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த அமைதியான போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
இதில் இன்று (25) திருகோணமலை -ஜுப்லி மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு சிவில் செயற்பாட்டாளர்களை சந்தித்த நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக ஜுப்லி மண்டபத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது கண்ணீர் மழ்க பல கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்து மகஜர்களையும் கையளித்ததுடன் தீர்வுகளுக்காக அவசரமான நியாயத்தை நீதியை நிலை நாட்டுமாறும் உயர்ஸ்தானிகரிடத்தில் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம், மனிதப் புதை குழி, நில அபகரிப்புக்கான தீர்வுகளை கோரியும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் எடுத்து கூறினர்.














