கிண்ணியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அங்கு கடமையாற்றுகின்ற பணிக்குழாத்தினருக்கும், கௌரவ உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பதற்கான நிகழ்வு இன்று (24) கிண்ணியா நகர சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பணிக்குழாத்தினர் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இந் நிகழ்வானது இரண்டு அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அலுவலக உதவியோகத்தர்கள் ஊழியர்களுக்கானது, வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கானது.
இந் நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டதோடு தவிசாளர், பிரதி தவிசாளர், செயலாளர் ஆகியோரது உரைகளும் நடைபெற்றன.




