சர்வதேச அன்னையர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) மூதூர் கிளிவெட்டி, பாரதிபுரம் பாரதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பு. ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.
வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் அன்னையர்கள் 116 பேருக்கு அவர்களின் பிள்ளைகளால் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .
நிகழ்வின் பிரதம அதிதியாக மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவ பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. எம்.ஜெ.பாத்திமா றிப்கா கலந்து சிறப்பித்தார்.


