கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை நேற்று இரவு கொண்டு சென்ற போது பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக முகமாலை பகுதியில் வீதி சோதனையின் மூலம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 22 கால்நடைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த பாரவூர்தியின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கால்நடைகளை கொண்டு சென்ற பொழுது சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதிப்பத்திரம் இன்மை, கால்நடை வைத்தியரின் அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கான இட வசதிகள், சுகாதார வசதிகள் இம்மை காரணமாகவும் மற்றும் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வழித்தட அனுமதிப்பத்திரம் இன்மை போன்ற காரணங்களால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










