• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!

Mathavi by Mathavi
May 29, 2025
in இலங்கை செய்திகள்.
0
பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்; போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா வியாக்கியானம்.!
Share on FacebookShare on Twitter

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்..

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தம் நிறைவடைந்தமை எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது. நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் முன்னேற்றப்பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள சில இலங்கை தமிழர்கள் தமது வீசாவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு தம்மால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதை அவர்கள் அந்த நாடுகளிடம் கூறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கு ஓரளவு அச்சுறுத்தல் காணப்படுகிறது. அந்த அச்சுறுத்திலிருந்து முற்றாக மீள்வதற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருவருக்கு முன்னாள் மண்டியிடுவதை விடுத்து பலம் மிக்க நாடாக மாற்றமடைய வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசணை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தால் மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம். இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சர்வதே நாணய நிதியத்தின் பொறுப்பல்ல.

எனவே பாதுகாப்பு படைகளின் ஆளணியைக் குறைப்பதாகக் கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பாதுகாப்பு படைகளை கலைத்து அதன் மூலம் மீதப்படுத்தப்படும் 80 பில்லியனைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

தான் எதிர்பார்க்கும் தேசியப் பாதுகாப்பு நாட்டில் கிடையாது எனவும் பொது மக்கள் பாதுகாப்பிலும் இடைவெளி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் ஏதேனுமொரு பலவீனத்தின் காரணமாகவே நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே தான் அனுபவமும் அறிவும் மிக்கவர் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும்.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தொடர்ச்சியாக அதற்கு இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உருவாகுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்றாகிவிடும்.

தேசிய போர் வீரர் தினத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைதிக்காகவே அனைவரும் போராடியதாக கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதிக்காக தலதா மாளிகையின் மீதோ, ஸ்ரீ மகா போதியின் மீதோ தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது.

பிரபாகரன் அமைதிக்காக போராடியதாகக் கூறினால் அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி அவரது நிலைப்பாட்டைக் கூறியதால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஓடிச் சென்று நீ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூச்சலிடுவதற்கு நான் முட்டாள் இல்லையல்லவா? என்றார்.

Related Posts

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

by Bharathy
May 16, 2026
0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

by Mathavi
May 15, 2026
0

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 15, 2026
0

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

by Mathavi
May 15, 2026
0

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி