கடந்த 2024 ஆண்டு 28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்று பின்பு இரத்தபோக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை வைத்தியர் ஊழியர்களின் அசமந்த போக்கு காணமாக இறந்ததாக கூறப்பட்டிருந்த சிந்துஜாவினுடைய வழக்கு மன்னார் நீதி மன்றத்தில் இதுவரை நான்கு வழக்குகள் நடைபெற்று முடிந்துள்ளது.
அடுத்த தவணை எதிர்வரும் 27.05.2025 ஐந்தாவது தடவை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றதாகவும் இதுவரை வைத்தியசாலை நிர்வாகம் எனது பிள்ளையின் இறப்பிற்கு எந்தவிதமான உண்மையான கருத்துக்களை தெரிவித்து எனது மகளின் இறப்பிற்கு நீதி கிடைக்க ஏதுவாக அமையவில்லை எனவும் இந்த செய்திகளைப் பார்த்தாவது எனது மகளிற்கு நீதியை பெற்றுதருமா என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் சிந்துஜாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
