ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜெர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஜெர்மனி பயணம் ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், தமிழர் தாயகத்தில் நடந்த இனப் படு கொலைகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுர அரசாங்கத்தை எதிர்த்து ஜெர்மனியிலும் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன அழிப்பு இடம்பெற்ற போது அநுரவும் மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. ஆகையால் புலம்பெயர் தமிழர்கள் அநுர செல்லும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.