முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டனர்.
பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
