இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே கிழிந்த நிலையிலிருந்த பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணப்பொதியானது பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே ஊர்மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத்தகவல் தெரிவித்தனர் .
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டதாகவும்,பின்னர் சடலம் பயணப்பொதியில் அடைக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT