பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் அத்தியாவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாறு நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, வத்தளை, ஜா-எல, பேலியகொட, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.