விஜய் படைப்பகத்தின் இரண்டாவது வெளியீட்டு நிகழ்வாக பெரியதம்பி எழுதிய “மல்லாவியும் என் மறுபிறவியும்”, அனுஹரி வன்னி எழுதிய “சூழ்நிலைக் கைதி” நூல்களின் வெளியீட்டு விழா இன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
மூத்த இலக்கியவாதி தமிழ்மணி, முனைவர் மேழிக்குமரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலாசிரியர்கள் அறிமுக உரையினை ந. நவரூபனால் மேற்கொள்ளப்பட்டதுடன், நயவுரையினை தமிழாசிரியரும், கவிஞருமான வே. முல்லைத்தீபன் மற்றும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான ந. கபிலநாத் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் நூலாசிரியர்களால் நூல்களின் பிரதிகளை அதிதிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், நூலாசிரியர்களிற்கான கௌரவமளிப்பும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுநிலை பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தமும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி த. நிறைமதி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ஜெ.தட்சாயினி மற்றும் கௌரவ விருந்தினர்களாக இலக்கிய ஆர்வலர் கலாபூஷணம் நா. தியாகராஜா, எழுத்தாளர் ஆன்மீகச் சுடர் சி. சிவசோதி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருத்தனர்.




