இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த செவ்வாய்கிழமை முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை (25) விமான மூலமாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்து.
இதில் ஏற்கனவே நாகபட்டினத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் இங்கு இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை 26/3/2025 வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இருநாட்டு மீனவர்கள் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இலங்கை மீனவர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரிய ராசா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோணி பிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்) ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்ன ராசா (யாழ்ப்பாணம்), வர்ண குல சிங்கம் (யாழ்பாணம்) உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக மீனவர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முதல் கட்ட மீனவர்களுக்கு இடையேயான மீனவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.