“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொளிப்பதற்கான எனது முதல்ப்படியை எடுத்து வைக்கின்றேன்.” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலையில் (18) நடைபெற்றது.
“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொளிப்பதற்கான எனது முதல்ப்படியை எடுத்து வைக்கின்றேன்.” என்ற தலைப்பின் கீழ், AYEVAC இளையோர் அமைப்பு, சிறுவர் அபிவிருத்தி நிதியம் CDF மற்றும் அகரம் நிறுவனம் இணைந்து திருகோணமலை பேருந்து நிலையம் மற்றும் திருகோணமலை பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீதி நாடகம் நடத்தினர். சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அதன் பாதிப்புகள், மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வின் முக்கிய நோக்கம் சிறுவர்கள் மீதான வன்முறையின் தீவிரத்தையும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதாகும்.குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளர்வது சமூகத்தின் பொறுப்பாகும் என்று ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர். பெற்றோர்கள், சமூகத்தலைவர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் குழந்தைகள் மீதான வன்முறையை ஒழிக்க உறுதிப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அழுத்தமாக கூறினர்.
இந்த முயற்சி குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். குழந்தைகள் ஒரு பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலில் வளர்வதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.




