இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் தெரிவாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் மூலம் கட்சி மாவட்டப் பணிமையில் இன்று (30) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் 36 உறுப்பினர்கள் பங்கு கொண்டனர். இதன் மூலம் சிறந்த தலைமைத்துவப் பண்பு உள்ளிட்ட பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டிருந்தன.
இதில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் தெரிவான இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தவிசாளர்களாக தெரிவாகவுள்ளவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



