கொழும்பு – கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் தற்போது முன்னெடுத்துள்ளனர்.