நியூசிலாந்து – இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.